உளுந்தூர்பேட்டை அருகே பழையநன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருக்கு இரண்டு வயதில் அன்புச்செல்வன் என்ற மகன் இருக்கிறார், மனைவி ரம்யா விவசாய கூலி வேலை செய்துவருகிறார். இன்று (மார்ச் 4) காலை ரம்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார்.
தாயை தேடி அன்புச்செல்வன் ஏரியின் வழியாக சென்றபோது ஏரி குட்டையில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக சென்ற கூலித் தொழிலாளர்கள் குழந்தையை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து திருநாவலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை - மருத்துவர் கைது