கள்ளக்குறிச்சி: குதிரைசந்தல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்த நிலையில் இன்று (டிசம்பர் 17) வழக்கம்போல் மாணவர்கள் பள்ளி வகுப்பறையில் படித்துவந்தனர்.
அப்போது அப்பகுதியில் திடீரென பலத்த காற்று வீசியது கூறப்படுகிறது. இந்த நிலையில் அருகே மரத்திலிருந்த தேன்கூடு காற்றின் வேகம் காரணமாக வேகமாக அசைத்துள்ளது.

பின்னர் மரத்தில் கூடுகட்டிருந்த விஷத் தேனீக்கள் திடீரென்று பறந்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொட்டின. இதனால் மாணவர்கள் துடிதுடித்து அலறியடித்து ஓடினர். இதனால் அப்பள்ளியில் பயிலும் ஐந்து மாணவிகள் உள்பட 20 பேர் காயமடைந்தனர். இது குறித்து 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து விஷத் தேனீ கொட்டிய மாணவர்கள் அனைவரும் பத்திரமாக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. திடீரென்று தேனீக்கள் பள்ளி மாணவர்களைக் கொட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை - பொன்முடி தகவல்