ETV Bharat / state

பக்ரீத் பண்டிகை: 3 மணி நேரத்தில் 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

பக்ரீத் பண்டிகை நெருங்கி வருவதால் உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் மூன்று மணிநேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

பக்ரீத் பண்டிகை: ஆடு விற்பனை அமோகம்
பக்ரீத் பண்டிகை: ஆடு விற்பனை அமோகம்
author img

By

Published : Jul 14, 2021, 12:49 PM IST

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் வாரம்தோறும் புதன்கிழமையன்று வாரச் சந்தை நடைபெறும். வழக்கமாக சந்தையில் 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை ஆகும்.

இந்த நிலையில் வரும் ஜூலை 21ஆம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. அதன்படி, இன்று (ஜூலை.14) காலை ஏழு மணிக்கு தொடங்கிய சந்தையில் திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர்.

உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகம்!

இச்சந்தையில், எட்டாயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. இந்நிலையில், மூன்று மணி நேரத்தில் நான்கு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: விரைவில் சசிகலா தலைமையில் அதிமுக இயங்கும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.