ETV Bharat / state

தாயாரின் இறுதி சடங்கை முடித்து பணிக்கு திரும்பிய ஆய்வாளர் விபத்தில் பலி - avadi battalion inspector death in accident

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

avadi battalion inspector death in accident

author img

By

Published : Jun 10, 2021, 7:51 PM IST

திருநெல்வேலி மாவட்டம் சிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (56). இவர் சென்னை ஆவடி பட்டாலியன் பண்டக பிரிவில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு பணிக்கு செல்வதற்காக திருச்சியிலிருந்து சென்னைக்கு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறஞ்சி பகுதியில் சென்ற போது, காரின் டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரிர்ல மோதியது. அதனைத்தொடந்து காருக்கு முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து எடைக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரியமேடு பகுதியில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.