ETV Bharat / state

சமூக நீதி ஜெயிக்கும் வரலாறு - 'நீட்' தேர்வில் வென்ற சாமானிய மாணவியின் கதை! - அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு

ஒரு (நீட்) தேர்வு, அதைச் சுற்றி நடந்த பல சர்ச்சைகள், அத்தேர்வு களவாடிய மாநில மருத்துவ படிப்பிற்கான இடங்கள், மறுக்கப்பட்ட சமூக நீதியை, உள் இடஒதுக்கீடு மூலம் மீட்டெடுத்த தமிழ்நாடு அரசின் செயல். அதனால் மருத்துவப் படிப்பை எட்டிப்பிடித்த சாமானியரின் மகள் ஜெயபிரியா ஜெயித்த கதை.இதோ...

நீட்' தேர்வில் வென்ற கதை
நீட்' தேர்வில் வென்ற கதை
author img

By

Published : Nov 19, 2020, 4:02 PM IST

கள்ளக்குறிச்சி : ஒரு சேர 5 பேர் நிற்க முடியாத ஒரு அறை; அது தான் அவள் வீடு. சில ஆண்டுகளாக மருத்துவக் கனவுகளுடன் இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களைக் கலவரம் கொள்ளச் செய்த மருத்துவ படிப்பிற்கான(நீட்) நுழைவுத் தேர்வில் தங்கள் குடும்பக் குழந்தை ஜெயித்த கதையை, நெருக்கியடித்தபடி நின்று அவர்கள் விவரிக்கிறார்கள், ஜெயபிரியாவின் குடும்பத்தினர். அவர்களின் பின்னால், கையில் சட்டப் புத்தகத்தை ஏந்தி, வானம் நோக்கி விரல் உயர்த்தியபடி படத்தில் நிற்கிறார், அண்ணல் அம்பேத்கர்.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்து முடிந்த நீட் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பூச்சாண்டி காட்டிய தேர்வு பய பூனைக்கு, கழுத்து மணி கட்டியிருக்கிறார், அரசுப் பள்ளி மாணவி ஜெயபிரியா. நீட் தேர்வில், ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் முதலிடமும், தமிழ்நாடு அளவில் 18ஆவது இடமும், பட்டியலினப் பிரிவில் மூன்றாவது இடமும் பெற்று தேர்வாகியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள காட்டுவன்னஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் - சந்திரமதி தம்பதியின் இரண்டாவது மகள் ஜெயபிரியா; அரசுப் பள்ளி மாணவி. இவரது தந்தை தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்க்கிறார்.

எல்லா அரசு பள்ளி மாணவர்களைப் போலவே ஜெயபிரியாக்குள்ளும் மருத்துவர் கனவு விதை விழுந்திருக்கிறது. அதற்காக தீவிரமாக உழைத்திருக்கிறார், ஜெயபிரியா. தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களுக்குச் சென்று பயிற்சி எடுக்க முடியாத அவருக்கு உதவியிருக்கிறது அரசு வழங்கிய நீட் பயிற்சி. அதற்கு வலுசேர்த்திருக்கிறது ஆசிரியர்கள், அக்கா, குடும்பத்தினர் கொடுத்த ஊக்கம்.

'எல்லோரும் சொல்லுற மாதிரி, நீட் தேர்வு கஷ்டமா இருக்கும்னு தான் நானும் நினைச்சேன். திட்டமிட்டு தீவிரமா உழைச்சா எந்த தேர்வையும் எதிர்கொள்ளலாம்னு நீட் எழுதுன பிறகு தான் தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட இந்த வெற்றியில என் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நிறைய பங்கிருக்கு' என வெற்றியின் சந்தோஷத்தை, அதற்காக உழைத்தவர்களுகளுடன் பகிர்ந்து கொள்கிறார், ஜெயபிரியா.

பாடத்திட்டங்களில் வேறுபாடு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சி இல்லை என வந்த விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ்நாடு அரசு, அரசு சார்பில் பயிற்சி மையங்களை ஏற்படுத்தி, அரசுப் பள்ளி மாணவர்களும் தேர்வில் திடமாக பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து உதவியது.

இத்தனை வசதி செய்தும், மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வர, மீண்டும் அரசியல் சதுரங்கத்தில் உருட்டப்படும் பொருளானது, நீட் தேர்வு.

மருத்துவப் படிப்பிற்கு மாநில அரசு கணிசமான தொகையைச் செலவு செய்ய, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டு மாணவர்களின் உரிமைப் பங்கைப் பெற, உள் இட ஒதுக்கீடு கொடுக்கத் தீர்மானம் நிறைவேற்றி அதைச் சட்டமாக்கியது தமிழ்நாடு அரசு. தேர்வு விஷயத்தில், சண்டையிட்டுக் கொண்டாலும், இட ஒதுக்கீடு விஷயத்தில் எதிர்க்கட்சிகளும் கைகோர்க்க, உள்இட ஒதுக்கீடு சட்டமானது. அந்த சட்டம் ஜெயபிரியாவிற்கு, மருத்துவக் கல்லூரியில் நுழையும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

'மருத்துவராகனுங்கிற குறிக்கோளோட பயிற்சி எடுத்த என் மகள், நீட் தேர்விற்கு அரசுப் பள்ளி கொடுத்த பயிற்சி, என் மகளை இன்றைக்கு ஜெயிக்க வச்சுருக்கு. அதோட, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, 7.5% இடஒதுக்கீடு வழங்கி, எனது மகளின் மருத்துவக் கனவை நனவாக்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி' என மகளின் வெற்றியைக் கொண்டாடுகிறார், ஜெயபிரியாவின் தந்தை செல்வராஜ்.

'தங்கையின் மருத்துவக் கனவைப் புரிந்து கொண்ட அவளோட ஆசிரியர்கள், பள்ளி முடிஞ்ச பின்னாடியும் பயிற்சி வகுப்புகளுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு சரியான முறையில் தொடர்பு கிடைக்குதா, பாடங்கள் புரியுதானு அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தாங்க. இப்போ அரசு கொண்டு வந்திருக்கிற, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு அவளோட மருத்துவக் கல்லூரி இடத்தை உறுதி செஞ்சது, சந்தோஷமா இருக்கு' என தங்கையின் வெற்றியை தன் வெற்றியாக சிலாகிக்கிறார், ஜெயபிரியாவின் அக்கா வனஜா.

காலத்தின் கட்டாயமாகி விட்ட நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலும், சரியான நேரத்தில் மாணவர்களின் உரிமைக்கான அரசின் ஆதரவும் கிடைக்கும் போது சாமானியனின் மகளும் சாதிக்கலாம் எனக் காட்டியிருக்கிறார், ஜெயபிரியா.

இதையும் படிங்க: மனித அன்பிற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் தாவரம்தான் பனைமரம் - காட்சன் சாமுவேல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.