ETV Bharat / state

ஆட்டோ மீது கார் மோதி விபத்து: 5 பேர் படுகாயம் - ஆட்டோ விபத்து

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

Ulundurpettai Car Accident  Kallakurichi Car Accident  Auto Collides To Car In Ulundurpettai  Auto and Car crash accident In Uluntherpettai  உளுந்தூர்பேட்டை கார் விபத்து  கள்ளக்குறிச்சி கார் விபத்து  ஆட்டோ விபத்து  5 injured in car-auto collision in Ulundurpettai
Ulundurpettai Car Accident
author img

By

Published : Dec 9, 2020, 1:36 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்து சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கிவந்த ஆட்டோ மீது சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோதி ஆட்டோ சாலையோரம் உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், வெள்ளையூர் கிராமத்தில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முகமது ஹாஜி, பாத்திமா, ஹாஜி முகமது, பாசித், பாஷா, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் முகமது ஹாஜி என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆட்டோவில் பயணம்செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அலட்சியத்தால் நேர்ந்த விபத்து: நூலிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்..பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.