ETV Bharat / state

விதியை யார் வெல்ல முடியும் - காருக்குள் விளையாடிய குழந்தைகள் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி: காருக்குள் விளையாடிய இரண்டு குழந்தைகள் கதவை திறக்க முடியாமல் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

car
car
author img

By

Published : Jul 24, 2020, 12:39 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகேயுள்ள குலதீபமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தனக்குச் சொந்தமான கார் பழுதான நிலையில் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று (ஜூலை 24) அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் மகள் வனிதா(3), ஏழுமலை மகள் ராஜி(7) ஆகிய இரண்டு பெண் குழந்தைகளும் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக ராஜாவின் காருக்குள் சென்று விளையாடினர். பின்னர் சிறுமிகள் வீடு திரும்பாததால், பெற்றோர் தேட ஆரம்பித்தனர். நீண்ட நேரமாக தேடியும் குழந்தைகள் பற்றிய விவரம் ஏதும் தெரியாமல் பதற்றமடைந்தனர்.

அப்போது வீட்டின் அருகே இருந்த காருக்குள் பார்த்த போது இரண்டு குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், காரின் கதவை உடைத்து, குழந்தைகளை மீட்டு உடனடியாக திருக்கோவிலூர் அரசு மருத்துவனைக்கு கொண்டுச் சென்றனர். குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணலூர்பேட்டை காவல்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காருக்குள் விளையாடிய குழந்தைகள், கதவை திறக்க முடியாததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அற்புதமான ஆற்றல் அளிக்கும் 9 உணவுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.