கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலுள்ள மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான குழு கல்வராயன் மலைப்பகுதி, வஞ்சிகுழி, சின்ன திருப்பதி, வாரம், குரும்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய ஆய்வில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது உறுதி செய்யப்பட்டது.
பின்னர், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த வெல்லம், சாராய ஊரல், மற்றும் முன்னதாக காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 420 லிட்டர் கள்ளச்சாராயம் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் அழித்தனர்.
இதையும் படிங்க: கல்வராயன் பகுதியில் 2,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு !