ETV Bharat / state

குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் - காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள்! - அயோத்தி

Ayodhya: ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Kadeswara Subramaniam
காடேஸ்வரா சுப்பிரமணியம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2024, 6:33 PM IST

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நாளை (ஜன.22) நடைபெறுகிறது. இந்நிலையில், கோயில் பிராணப் பிரதிஷ்டை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றி கொண்டாடுவோம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது. நீண்ட நெடிய இந்துக்களின் போராட்டத்திற்குப் பிறகு, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தீர்வு கிடைத்தது. பிரமாண்டமாக கட்டப்பட்டு வந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்ச்சியை ஒட்டி, நாட்டு மக்கள் அனைவரும் குழந்தை ராமனை வரவேற்று தரிசிக்க தயாராகி வருகின்றனர்.

பல மாநிலங்கள் இந்த வரலாற்று நிகழ்விற்காக பொது விடுமுறை அறவித்துள்ளன. பல பெரும் நிறுவனங்கள் கூட விடுமுறை வழங்கி உள்ளன. மடாதிபதிகளும், பல ஆன்மிக பெரியோர்களும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வரவேற்றுள்ளனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியினை வரவேற்கும் விதமாக, தமிழகம் முழுவதும் தங்களது இல்லங்களில் கோலமிட வேண்டும். குடும்பத்துடன் அமர்ந்து ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அனைத்து முக்கிய இடங்களிலும் கும்பாபிஷேக நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பைக் காண மக்கள் அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

ஒரு சிலர், இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் இதைப் பற்றி எதிர்மறை கருத்துக்களை திணித்து வருகின்றனர். ஒட்டுமொத்த இந்துக்களும் இந்த விழாவை கொண்டாட முடிவு செய்து விட்டனர். இதை வைத்து மத அரசியல் செய்பவர்களின் பேச்சு இனி ஈடுபடாது.

நாளை அனைத்து கோயில்களிலும் ராமர் சிறப்பு பூஜை நடைபெற இருந்த நிலையில், தமிழக அரசு வாய்மொழி உத்தரவின் மூலமாக கோயில்களில் ராம பஜனைக்கோ, அன்னதானம் செய்வதற்கோ அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். தமிழக அரசு இந்த விழாவை சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக புறக்கணித்து வருவதற்கு, பெரும்பான்மை இந்து சமுதாயம் வருகின்ற தேர்தலில் பதிலடி தருவார்கள்.

சிறுபான்மையினருக்கு எதிராக ஏதோ இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக பேசிக் கொண்டிருப்பவர்கள், ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். தொல்லியல் துறையின் தலைவராக இருந்த கே.கே.முகமது தந்த ஆதாரங்களே ராமர் கோயில் மீட்புக்கு உறுதுணையாக இருந்தது.

500 ஆண்டுகால இந்துக்களின் எழுச்சி போராட்டத்திற்குப் பிறகு இந்த தீர்வு கிடைத்துள்ளது. ராமர் கோயிலின் பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியை ஒட்டுமொத்த மக்களும் கொண்டாட தயாராகி விட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை அயோத்தியின் மன்னர்கள் வீடு திரும்புகின்றனர்.. கங்கனா ரனாவத்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.