ETV Bharat / state

காதல் திருமணம் புரிந்தோருக்கு புதிய சலுகை!

சென்னை: காதல் திருமணம் புரிந்தவர்கள் குடும்ப அட்டை பெறுவதற்கான நடைமுறையில் புதிய சலுகையாக, பதிவு பெற்ற முத்திரைத்தாள் பதிவாளர் முன்னிலையில், பெற்றோர்களது குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிக் கொள்ளலாம் என தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவை வெளியிட்டுள்ளது.

குடும்ப அட்டை
author img

By

Published : Mar 16, 2019, 9:08 AM IST

தமிழகத்தில் காதல் திருமணம் புரிந்தவர்கள் சான்றிதழ்கள் மற்றும் குடும்ப அட்டை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்தன. அதில் காதல் திருமணம் புரிந்தோர், தங்களது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான அறிவுரைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அண்மையில் உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காதல் திருமணம் புரிந்து கொண்டோர், புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு ஏதுவாக, தங்களது பெற்றோரின் குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கக் கோரும் போது, சில பெற்றோர் நீக்க மறுப்பதாகவும், பெயரை நீக்கி சான்றிதழ் வழங்க வேண்டுமெனவும் துறைக்கு பல்வேறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

பதிவு திருமண சட்டத்தின் நிபந்தனைகள்படி திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்வதற்கு பெற்றோரின் சம்மதம் தேவை என்ற நிபந்தனை இல்லை. எனவே, தம்பதியர் தங்களது விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ தங்களது பெற்றோரின் குடும்ப அட்டைகளில் இருந்து பெயரை நீக்கக் கொள்ள உரிமை உள்ளது.

அதன்படி, காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், அவரவர் பெற்றோரது குடும்ப அட்டையில் இருந்து, தங்களது பெயர்களை நீக்கிக் கொள்ள ரூ.100 மதிப்புடைய முத்திரைத்தாளில் தம்பதியர் இருவரும், பதிவு பெற்ற முத்திரைத்தாள் பதிவாளர் முன்னிலையில், பெற்றோர்களது குடும்ப அட்டையில் இருந்து தங்களது பெயர்களை நீக்கிக் கொள்ளலாம்.

அதாவது, குடும்ப அட்டையில் பெயரை நீக்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நாங்களே பொறுப்பு என இருவரும் கையெழுத்திட்ட உறுதிமொழி பத்திரத்தை, பெயர்களை நீக்கக் கோரும் விண்ணப்பத்துடன் இணைத்து, தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தம்பதியினர் காதல் திருமணம் செய்து கொண்டதற்கான சட்டரீதியான ஆவணம் திருமணப் பதிவுச் சான்றிதழ் மட்டுமே. எனவே, தம்பதியினர் அவரவர் பெற்றோர்களது குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவது தொடர்பாக அரசு விதித்துள்ள நிபந்தனைகளுடன் திருமணப் பதிவுச் சான்றிதழையும், புதிய மின்னணு குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்துடன் இணைத்து சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கும் அதிகாரியிடம் அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Intro:Body:

New guideline to getting ration card for love marriage couple 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.