ஈரோடு: ஈரோட்டில் ஊர்காவல் படையில் பணிபுரியும் ஊழியரான யுவராஜ் பாம்பு பிடிப்பதில் ஆர்வம் காரணமாக கடந்த 14 வருடங்களாக பொதுமக்களுக்கு அச்சுறுத்தி வரும் கொடிய விஷத்தன்மை கொண்ட அரிய பாம்புகளை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து வருகிறார்.
இந்நிலையில் ஆயுத பூஜை பண்டிகையொட்டி பொதுமக்கள் வீடுகள் வணிக நிறுவனங்கள் சுத்தம் செய்து வந்த நிலையில் ஒரே நாளில் மட்டும் குமலன் குட்டை, செல்வம் நகர், மாணிக்கம்பாளையம், சக்தி நகர், கருங்கல்பாளையம், சோலார், சூளை உள்ளிட்ட மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட வீடுகளில் சமையல் அறை, மோட்டார் அறை, ஏசி, கட்டுமான பொருட்கள் இருப்பு வைக்கப்பட்ட இடம், மெத்தை படிக்கட்டுகள் அடியில், கார் சக்கரம், குடிநீர் குழாய் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இந்த பாம்புகள் 3 அடி நீளம் முதல் 10 அடி நீளம் வரை கோதுமை நாகம், சாரை பாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேரி மூக்கன் உள்ளிட்ட 4 வகையான 18 பாம்புகளை எவ்வித பாம்பு பிடி கருவிகளும் இல்லாமல் லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து பாராட்டை பெற்றுள்ளார்.
இதன் மூலம் 14 வருடங்களில் 34 ஆயிரத்து 800 பாம்புகளை இதுவரை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து இருப்பதாக பாம்பு பிடி வீரர் யுவராஜ் தெரிவித்தார். மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டு வரும் தனக்கு அரசின் சார்பில் உபகரணங்களோ அல்லது ஊக்கப்படுத்தும் வகையில் நற் சான்றிதழ் கூட வழங்காதது வேதனை அளிப்பதாக கூறினார்.
மேலும் ஆயுத பூஜை தினத்தில் மட்டும் காலை 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை பாம்பு பிடிபணியில் ஈடுப்பட்டதாவும் பொதுமக்களுக்கு பாம்பு பார்த்தவுடன் செய்ய வேண்டிய வழி முறைகளையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதனால் பொதுமக்களின் சிறந்த பாம்பு பீடி வீரராக உள்ள இளைஞர் யுவராஜ்க்கு ஊக்கப்படுத்தும் வகையில் உதவ அரசு முன் வர வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: காலாவதியான சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம் - அமைச்சர் எ.வ.வேலு!