ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் நேற்று(நவ-2) மாலை பவானிசாகரில் இருந்து பகுடுதுறை செல்லும் சாலையில் நடந்து சென்ற போது மாணவியை பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்தில் வைத்து அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகே சென்று தடுக்க முயன்ற போது அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்தார். கழுத்தில் ரத்தக்காயம்பட்ட பள்ளி மாணவியை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் கழுத்தில் கத்தி வைத்து அறுத்து கொலை செய்ய முயன்ற வாலிபர் பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது மகன் நவீன்குமார் (21) என்பதும், ஏற்கனவே இந்த மாணவி தொடர்பான போக்சோ வழக்கில் நவீன் குமார் கைதாகி ஜாமினில் வெளியே வந்ததும் தெரிய வந்துள்ளது. மாணவியை பின் தொடர்ந்து சென்று தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:இளைஞர் மீது ஆசிட் வீசிய தந்தை, மகள் கைது