ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானியாற்றுப் பாலத்திலிருந்து இன்று திடீரென ஒரு இளைஞர் ஆற்றில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் பவானியாற்றுப் பாலத்தில் திரண்டனர். அதையடுத்து அங்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு படைவீரர்கள் ஆற்றுப்படுகையில் இறங்கி, பாலத்திலிருந்து குதித்த இளைஞரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பவானீஸ்வரர் ஆலயம் அருகே நீரில் மிதித்த அந்த இளைஞர், இறந்த நிலையில் சடலமாக மீட்டப்பட்டார். 60 அடி உயரமுள்ள பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தபோது ஏற்பட்ட காயத்தால் இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது.
இறந்தவரின் விபரம் குறித்து சத்தியமங்கலம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தற்கொலை செய்துகொண்ட இளைஞர் சத்தியமங்கலம் பவானியாற்றுப் பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்ததாவும், அதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் சென்றுவிட்ட நிலையில் மதுபோதையில் இருந்த இளைஞர் பவானியாற்றில் குதித்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மோதிரம் திருடியதால் கண்டித்த தந்தை: மனமுடைந்த மகள் தூக்கிட்டு தற்கொலை!