ஈரோடு: அரச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவர் பெருந்துறை அருகேவுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று (மே 26) வழக்கம்போல் அவர் அரச்சலூரில் ஊரிலுள்ள அவரது வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச்சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருந்துறை ஆர்எஸ் அருகே சென்றபோது திடீரென தனது இருசக்கரவாகனத்தில் கொண்டுவந்த பெட்ரோலை எடுத்து ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் வெள்ளோடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளோடு காவல் துறையினர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த பிரபுவை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், போகும் வழியிலேயே பிரபு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரபு தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிதைத்து புதைக்கப்பட்ட உடல் - ஹரியானா பாடகியை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் கைது!