ETV Bharat / state

ஷேர்சாட் மூலம் பழகிய சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் - போக்சோவில் கைது - சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது

ஷேர்சாட் மூலம் பழகிய சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

ஷேர்சாட் மூலம் பழகிய சிறுமி பாலியல் வன்புணர்வு

author img

By

Published : Jun 29, 2022, 3:36 PM IST

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி 12ஆம் வகுப்பு முடித்துள்ளார். இவர் 2020ஆம் ஆண்டு கரோனா காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். ஆன்லைன் என்பதால் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது ஷேர்சாட் என்ற செயலின் மூலம் கோவையைச் சேர்ந்த ஜேசுதாஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் அடிக்கடி இருவரும் செல்போனில் பேசிப் பழகி வந்துள்ளனர். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது ஜேசுதாஸ் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ஜேசுதாஸ், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைக் கூறி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

தொடர்ந்து அவர் பல முறை மாணவியின் வீட்டிற்குச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இந்நிலையில் ஜேசுதாஸ் நடவடிக்கை பிடிக்காததால் மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், கடந்த சில நாள்களுக்கு முன்பு மாணவியின் தந்தை வாட்ஸ்அப் எண்ணிற்கு ஜேசுதாஸ் ஒரு புகைப்படத்தை அனுப்பி இருந்தார். அதில் ஜேசுதாசும், மாணவியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை அனுப்பி தனக்குப் பணம் தர வேண்டும் என்றும்; இல்லையென்றால் இந்தப் படத்தை சமூக வலைதளத்தில் அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியும் அவரது குடும்பத்தினரும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஜேசுதாஸை தேடி வந்தனர். அப்போது ஜேசுதாஸ் கோவையில் உள்ள ஒரு பிஸ்கட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற காவல் துறையினர் ஜேசுதாஸை மடக்கிப் பிடித்தனர்.

தொடர்ந்து அங்கு இளைஞரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜேசுதாஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: தொடர் கஞ்சா கடத்தல்: 3 குற்றவாளிகளுக்கு சொந்தமான ரூ.5.5 கோடி சொத்துக்கள் முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.