ETV Bharat / state

மோடி பெயரில் மோசடி: 5 பேர் கைது! - மோசடி

ஈரோடு: பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தருவதாகக் கூறி கிராம மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர், இரண்டு பெண்கள் உட்பட 5 பேரை கிராம மக்கள் பிடித்து காவல் துறையினிரிடம் ஒப்படைத்தனர்.

modi
author img

By

Published : Jun 10, 2019, 11:57 AM IST

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தொட்டியபாளையம் அடுத்துள்ள பனங்காட்டு காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்களிடம் பிரதமர் மோடி பெயரில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி ஐந்து பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் பணம் வாங்கியுள்ளது. அந்தக் கும்பல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கிராம மக்களிடம் ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுச் சென்றுள்ளது.

இதுவரை எத்தகைய உதவியும் கிராம மக்களுக்கு கிடைக்காத நிலையில் இன்று மீண்டும் ஐந்து பேர் கொண்ட கும்பல் கிராம மக்களை சந்தித்துள்ளனர். அப்போது, தலா ஐந்தாயிரம் ரூபாய் அதோடு உங்களது அசல் வங்கி கணக்கு புத்தகத்தையும் கொடுங்கள், விரைவில் உங்களுக்கு பணம் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மோடி பெயரில் மோசடி: 5 பேர் கைது!

இதை கேட்டதும் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்கள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு, மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடித்து பவானி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, சித்தேஸ்வரன், மணி, நிர்மலா, ராதா ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

ஈரோடு 10.06.2019
சதாசிவம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிரதமர் மோடி பெயரில் வீடு கட்டித் தருவதாக கூறி கிராம மக்களிடம் மோசடி ஈடுபட்ட  வழக்கறிஞர் மற்றும் 2 பெண்கள் உட்பட 5 பேரை கிராம மக்கள் பிடித்து காவல்துறையினிரிடம் ஒப்படைத்தனர் ஐந்து பேரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்...

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள தொட்டியபாளையம் அடுத்துள்ள பனங்காட்டு காலனி பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்களிடம் பிரதமர் மோடி பெயரில் இயங்கும் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டுவதற்கு  இரண்டு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அரசிடமிருந்து பெற்றுத் தருவதாக கூறி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஐந்து பேர் கொண்ட குழுவினர் கிராம மக்களிடமிருந்து தலா ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுச் சென்றுள்ளனர்.இதுவரை எத்தகைய உதவியும்  கிராம மக்களுக்கு கிடைக்காத நிலையில் இன்று மீண்டும்  கிராம மக்களை சந்தித்த கும்பல் தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் உங்கள் அசல் வங்கி கணக்கு புத்தகத்தையும் கொடுங்கள் விரைவில் உங்களுக்கு பணம் வர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் அவர்கள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலை பிடித்து பவானி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.  இதனையடுத்து பவானி போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்போது சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சித்தேஸ்வரன், மணி மற்றும் நிர்மலா, ராதா என்ற இரு பெண்கள்  என்பது தெரியவந்தது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்டள்ளது தெரிய வந்தது மோசடி கும்பலை கிராம மக்கள் பிடித்து  காவல்துறையில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... 

Visual send ftp
File name:TN_ERD_01_10_CHEATING_TEAM_ARREST_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.