ETV Bharat / state

தென்னை மரங்களைத் தாக்கும் வெளிநாட்டு வெள்ளைப் பூச்சிகள் - White insects coconut trees

ஈரோடு: விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் சுருள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எந்த விதமான மருந்துகளையும் தெளிக்க வேண்டாமென வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

virus
virus
author img

By

Published : Jan 22, 2020, 2:35 PM IST

ஈரோடு மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் "ரூகோஸ்" என்ற சுருள் வெள்ளைப் பூச்சிகளால், ஓலைகளில் அடிப்பகுதி கறுப்பு நிறமாக மாறியது. இதனால் அச்சமடைந்த விவசாயிகள், தென்னை மரங்களில் நோய்த் தாக்குதல் ஏற்படாமல் தடுக்க வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில், கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நம்பியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் உள்பட பல்வேறு விவசாயிகளின் தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தென்னை மரங்களில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த நன்மை செய்யும் பூச்சி இனங்களும் ஒட்டுண்ணிகளும் அதே அளவு உள்ளதாக அப்போது தெரியவந்தது.

விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் சுருள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த, எந்தவிதமான மருந்துகளையும் தெளிக்க வேண்டாமெனவும், எளிய வகையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த எவ்வாறு பொறிகளை அமைப்பது என்பது குறித்தும் வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குநர் பிரபாகர், பூச்சியியல் பேராசிரியர் நெல்சன் ஆகியோர் விளக்கமளித்தனர்.

விவசாயிகளுக்கு விளக்கமளிக்கும் வேளாண்மைத் துறை அலுவலர்கள்

சுருள் பூச்சியினால் தென்னைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், அதனால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானதாகவும் இருக்கும் என்றும், வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காப்பான் படம் வெளிக்கொணர்ந்த கதை: பூச்சித் தாக்குதல்... உருவானதா? உருவாக்கப்பட்டதா?

Intro:Body:
tn_erd_02_sathy_coconut_virus_vis_tn10009

தென்னை சாகுபடியில் ஈககள் பாதிப்பா்ல் விவசாயிகள் கவலை: ஈக்களை கட்டுபடுத்த வேளாண் அதிகாரி செயல்விளக்கம்

கோபிசெட்டிபாளையம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தென்னை மரங்களில் ரூகோஸ் எனப்படும் வெள்ளை ஈக்களின் தாக்குதல் குறித்து வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு கட்டுப்படும் முறைகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாண்பித்தனர்

ஈரோடுமாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள தென்னை மரங்களில் ரூக்கோஸ் என்ற சுருள் வெள்ளை பூச்சிகளால் ஓலைகளில் அடிப்பகுதி கருப்பு நிறமாக மாறி அதன் மூலம் நோய் தாக்குதல் இருப்பதாகவும் அதனை கட்டுப்படுத்தவும் விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகளிடம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆதன்அடிப்படையில் கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த பூச்சியில் பேராசிரியர் மற்றும் பவானிசாகர் அதிகாரிகளின் தலைமையில் பவானிசாகர், நம்பியூர், சத்தியமங்கலம், மற்றும் கோபிசெட்டிபாளையம் உள்ள பல்வேறு விவசாயிகளின் தோட்டங்களில் அமைந்துள்ள தோப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ அதிகளவில் இருக்கது தெரியவந்தது. ஆனால் வெள்ளை ஈக்களை கட்டுப்படும் நன்மை செய்யும் பூச்சி இனங்களும் ஒட்டுண்ணிகளும் அதே அளவு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதனால் ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தென்னை மரத்தில் சுருள் பூச்சிகளை கட்டுப்படுத்த எந்த விதமான மருந்துகளையும் தெளிக்க வேண்டாமெனவும் எளிய வகையில் பூச்சிகளை கட்டுப்படுத்த எவ்வாறு பொறிகளை அமைப்பது என்பது குறித்தும் வேளாண்மை பல்கலைக்கழக பயிர் பாதுகாப்பு இயக்குனர் பிரபாகர் மற்றும் பூச்சியியல் பேராசிரியர் நெல்சன் ஆகியோர் விளக்கமளித்தனர். மேலும் வெள்ளை ஈக்கள் என்பது கெடுதல் செய்யும் பூச்சி வகையை சேர்ந்தது எனவும் அந்த பூச்சியை கட்டு படுத்த தென்னை மரத்தின் இடையில் விளக்கெண்ணெய் தேய்த்த பசையுள்ள மஞ்சள் நிற பாலிதீன் காகிதங்களை கட்டி வைத்தால் கெடுதல் செய்யும் பூச்சிகள் அந்த பொறிகளால் கட்டுப்படும் என்றும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிந்தால் நன்மை செய்யும் பூச்சி இனங்களும் அதிகளவு அழிந்து விடும் என்றும் சுருள் பூச்சி என்னும் வெள்ளை ஈயினால் காய் காய்பதிலோ மரம் பட்டுப்போவோதோ என்பது உட்பட தென்னைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் அதனால் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே போதுமானதாகவும் வேளாண் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பேட்டி:
1.திரு.நெல்சன் வேளாண் விஞ்ஞானி பூச்சியியல் துறை கோவை
2.திரு.மாருச்சாமி விவசாயி தாசம்பாளையம

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.