தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடைபெறுவதற்கான பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 374 வாக்குச்சாவடிகளுக்குத் தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடைபெறுவதற்குத் தேவையான பொருள்கள் தரம்பிரித்து அடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், நோய்வாய்ப்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடி அறைக்குள் செல்வதற்கு உதவியாக சக்கர நாற்காலிகள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்புவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5ஆம் தேதி காலை முதல் வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொருள்களை அனுப்பிவைக்கும்போது சக்கர நாற்காலிகள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாகத் தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கனிமொழிக்கு கரோனா உறுதி