கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலை வாய்ப்பை இழந்த மாற்றுத்திறனாளிகள் உணவின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வாழ்வாரத்தை மேம்படுத்த முடியாத மாற்றுத்திறனாளிகள் மற்றும் வறுமையில் வாடும் குடும்பத்தினருக்கு மாவட்ட காவல் துறை சார்பில் மளிகை, காய்கறிகள் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி பசுவாபாளையத்தில் நடைபெற்றது.
இதில், 125 பேருக்கு பசுவாபாளையம், பட்டமங்கலம் மற்றும் புதுபீர் கடவு கிராமங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரண பொருள்கள் ஈரோடு எஸ்பி சக்திகணேசன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சக்திகணேசன், "ஈரோடு மாவட்டம் கடந்த 17 நாள்களில் கரோனா தொற்று இல்லாததால் ஈரோடு மாவட்டம் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளது. பாதிக்கிணறு மட்டுமே தாண்டியுள்ளோம். இன்னும் 13 நாள்கள் தொற்று ஏற்படாமல் இருந்தால் மட்டுமே பச்சை மண்டலத்திற்கு மாறும்.
இதன் காரணமாக காவல் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஒரு சில இடங்களில் மருத்துவக்குழு அறிவுரையின்படி தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோரை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: 2018ஆம் ஆண்டில் உலகளாவிய ஆன்லைன் வர்த்தகம் 26 லட்சம் கோடி டாலர்!