ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. இந்த அணையின் நீர்மட்ட கொள்ளளவு 105 அடியாகும். இதன்மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி, கேரளா மலைப்பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் தற்போது 59 அடியாக உள்ளது. இதனால் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி முதலமைச்சருக்கு, பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பவானிசாகர் அணையில் இருந்து ஆயிரம் கனஅடி நீர் திறந்து விட உத்தரவிட்டார். இந்த நீரானது 10 நாட்களுக்கு திறந்து விடப்படும். இதன்மூலம் ஈரோடு, கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறும்.