ETV Bharat / state

நீர்வரத்து குறைவால் பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிவு - பவானிசாகர் அணை நீர்மட்டம்

ஈரோடு: பவானிசாகர் அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் சரிவடைந்துள்ளது.

dam
dam
author img

By

Published : Nov 26, 2020, 3:27 PM IST

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 105 ஆகும். இந்த அணையில் நீரின் அளவு தற்போது 32.8 டிஎம்சி ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் மழை பெய்துவருகிறது. ஆனால் பவானி சாகர் அணைப்பகுதிகளில் வறண்ட வானிலையே கணப்படுகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து 500 கனஅடிக்கு குறைவாக வந்து கொண்டிருக்கிறது.

அணையிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படுவதால் நீர்வரத்தைவிட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ளது. தற்போது தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் 1,200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

டிசம்பர் 28ஆம் தேதிவரை இந்த நீர் திறப்பு இருக்கும். தமிழ்நாடு முழுவதும் பெய்துவரும் நிலையில் இந்தப் பகுதியில் மழை பெய்யாமல் அணைக்கு நீர்வரத்து குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

105 கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்பொழுது 95.5 அடியாக உள்ளது. அணையில் நீர்மட்டம் 95.37 அடியாக இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து 286 கனஅடியாக உள்ளது. 1,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது 25.37 டிஎம்சி நீர் இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.