ETV Bharat / state

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்குத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்! - கீழ்பவாணி

ஈரோடு: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு இரண்டாம் போகம் பாசனத்திற்காகத் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

Water cut for irrigation from Bhavani Sagar Dam!
பவானி சாகர் அணை
author img

By

Published : May 1, 2021, 12:10 PM IST

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.

105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியிலுள்ள ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் வகையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி முதல் இரண்டாம் போகம் நிலக்கடலை, எள், சோளம் பயிரிட ஐந்து சுற்றுகளாக குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்பட்டது.

10 நாள்கள் இடைவெளி விட்டு நாள்தோறும் விநாடிக்கு இரண்டாயிரத்து 300 கனஅடி என இதுவரை ஐந்து சுற்றுகளாக 10.43 டிஎம்சி தண்ணீர் பாசனத்திற்குத் திறக்கப்பட்டது. பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது.

அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்காலுக்கு விநாடிக்கு 600 கனஅடிநீரும் குடிநீர் தேவைக்காக ஆற்றில் 200 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 88.19 அடியாகவும், நீர் இருப்பு 20.40 டிஎம்சி ஆகவும் உள்ளது.

அணைக்கு நீர்வரத்து 148 கனஅடியாக உள்ள நிலையில் அணையில் தடப்பள்ளி அரக்கன் கோட்டை வாய்காலில் 500 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் 200 கனஅடி தண்ணீர் என மொத்தம் 700 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.