ETV Bharat / state

இறுதி சடங்கை நாங்க செய்றோம்; ஏழை மக்களை காக்க வந்த சிறகுகள்! - தமிழ்நாட்டில் முதன் முறையாக காடுவரை திட்டம்

ஈரோடு: ஏழை, எளிய மக்களுக்காக சிறகுகள் அமைப்பினர், காடுவரை திட்டத்தை தொடங்கி தமிழ்நாடு முழுக்க பலரது நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

siragukal
siragukal
author img

By

Published : Mar 12, 2020, 10:53 AM IST

இன்றைய கால கட்டத்தில் இளைஞர்கள் பாசத்தை மறந்து, தனது சொந்த தாய், தந்தையரை மதிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றனர். முதிய வயதில் வீட்டை விட்டு துரத்தப்படும் நிலை மிகவும் சோகத்தை தருகிறது. பக்கத்து வீட்டில் ஒருவர் இறந்தால் கூட ஒரு அனுதாபப்படாமல் நகர வாழ்க்கையில் சிக்கி தவிக்கின்றோம்.

இந்த நிலையில், இறந்தவர் எவராக இருந்தாலும், அவர்களது முழு செலவையும் ஏற்று இறந்தவரை அடக்கம் செய்ய முன்வந்துள்ளது சிறகுகள் என்ற அமைப்பு. இந்த அமைப்பின் அறிவிப்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சிறகுகள் என்னும் அமைப்பு ஈரோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் உதவியுடன் ஈரோடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர். அதேபோன்று கட்டுமானப் பணிகளுக்காக வெட்டப்படும் பழமையான மரங்களை வெட்டி வேர்களுடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட்டு மரங்களை உயிர்ப்பிக்கும் பணியினையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஏழை எளிய மக்களுக்காக காடுவரை திட்டம்...

சிறகுகள் அமைப்பினர், ஏழை, எளிய மக்களின் மறைவின் போது அவர்களது இறுதி அஞ்சலிக்கான செலவினத்தை ஏற்கவும், குளிர்சாதனப் பெட்டிகள் தந்து உதவும் வகையில், புதிய அமைப்பான காடுகள் வரை என்கிற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அளவில் முதன்முறையாகத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு, ஈரோட்டில் இருக்கும் பிரபல மருத்துவர்கள், தொழிலதிபர்கள் உதவியை பெற முயன்றுள்ளனர். இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. ஏழை,எளிய மக்களின் உறவினர்களை நிம்மதியாக அடக்கம் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் சிறப்பான திட்டம்.

காடு வரை திட்டத்தை தொடங்கிய சிறகுகள் அமைப்பு.

இதனை ஏழை, எளிய மக்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஈரோட்டைச் சேர்ந்த மக்களும், தங்களது முழு ஒத்துழைப்பைத் தந்திட வேண்டும் என்று தனியார் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏழை, எளியவர்களுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் ஏற்று இறந்தவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவர்களது குடும்ப முறைப்படி காரியத்தை மேற்கொள்ள உதவுவோம் என்று அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை இறந்தவர்களை அடக்கம் செய்ய பணமின்றி தவிப்பவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'எனக்கு இதை சமைத்து தரியா' - மனுஷன் கையை வெட்டிக் கொடுத்த சைக்கோ கணவன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.