ETV Bharat / state

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்...! - Protest

கோபிசெட்டிப்பாளையம்: பள்ளாத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடுமாவட்டம்
author img

By

Published : Mar 22, 2019, 8:09 PM IST

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளத்தூர் கிராம மக்கள் நியாய விலைக்கடைக்கு செல்ல இரண்டு கிலேமீட்டர் தூரத்திற்கும் மேல் நடந்து செல்ல வேண்டியுள்ளதால், நியாயவிலைக்கடை அமைக்கவேண்டும் என்றும், குண்டேரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் வெள்ளப் பெருக்கினால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும் என்றும், இக்கிராமத்திற்கு பொதுக்கழிப்பறை மற்றும் சாக்கடை குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என்று பல வருடமாக மாவட்ட நிர்வாகத்தினரிடமும், சட்டமன்ற உறுப்பினர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மனு அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பள்ளத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி வாணிப்புத்தூர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாபுதூர் காவல்துறையினர் மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்க மறுத்த பள்ளத்தூர் கிராமமக்கள் அங்கிருந்து புறப்பட்டு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பங்களாபுதூர் பகுதிக்கு சென்று அங்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகன் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 அடிப்படை வசதி கோரி கருப்புக்கொடி ய ஏற்றிய கிராமமக்கள்

TN_ERD_SATHY_01_22_SALAI_MARIAL_VIS_TN10009 
(VISUAL FTP இல் உள்ளது

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேருராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி வீடுகளில் கருப்புக்கொடியேற்றி தேர்தல் புறக்கணிப்பு செய்து வாணிப்புத்தூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலம் அந்தியூர் பிரதான சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது… 

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அந்தியூர் சட்டமன்ற தொகுதி வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் குடியிருப்பு குண்டேரிப்பள்ளம் அணையின் உபரி நீர் ஓடையை ஒட்டி அமைந்துள்ளதால் குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் இவர்களது குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துவருவதாகவும் இவர்களுக்கான நியாயவிலைக்கடை வாணிப்புத்தூரில் அமைந்துள்ளதால் ரேசன் பொருட்கள் வாங்க இரண்டு கிலேமீட்டர் தூரத்திற்கும் மேல் நடந்து சென்று வாங்கிவருவதாகவும் இதனால் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கவேண்டும் என்றும் குண்டேரிப்பள்ளம் ஓடையில் ஏற்படும் வெள்ளப்பெருக்கினால் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கவேண்டும் என்றும் இக்கிராமத்திற்கு பொதுக்கழிப்பறை மற்றும் சாக்கடை குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும் என்றும் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிவருவாதாகவும் பல முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியும் வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்யப்பட்டு வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியுள்ளனர். இக்கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் வரை வரும் தேர்தல்களில் இப்பகுதி வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். மேலும் தற்போதைய அடிப்படைத்தேவையான குடிநீர் மற்றும் தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்றும் அடிப்படைவசதிகளை செய்துதரவேண்டும் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வாணிப்புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் அந்தியூர் சத்தியமங்கலம் பிரதான சாலையில் பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பங்களாபுதூர் காவல்துறையினர் மற்றும் கோபி வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் தற்போது தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ளதால் உங்களது அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்றித்தரப்படும் என்றும் உத்தரவாதம் அளித்தனர். அதனை ஏற்க மறுத்த பள்ளத்தூர் கிராமமக்கள் அங்கிருந்து புறப்பட்டு 5 கிலோமீட்டர் தொலையில் உள்ள பங்களாபு}ர் பகுதிக்கு சென்று அங்கும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அசோகன் பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சத்தியமங்கலம் அந்தியூர் பிரதான சாலையில் சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

TN_ERD_SATHY_01_22_SALAI_MARIAL_VIS_TN10009

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.