ஈரோடு மாவட்டம் சூரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் புதிதாக கட்டியுள்ள தனது வீட்டிற்கு வரிவிதிப்பு செய்ய சூரியம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் மாநகராட்சி பில் கலெக்டர் மாணிக்கம், குறைவான வரி விதிப்பு செய்ய குமாரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
மாநகராட்சி அலுவலர் மாணிக்கத்திற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலர்களிடம் புகாரளித்துள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களின் ஆலோசனையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை குமார், மாணிக்கத்திடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் மாணிக்கத்தை கைது செய்தனர்.