ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் வனப்பகுதியில் யானைகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. கடம்பூரில் இருந்து குன்றி பகுதிக்கு செல்ல இவ்வழியாக ஒற்றை வழிச்சாலை உள்ளது. அந்தவகையில் இன்று (மே 4) கடம்பூரில் இருந்து குன்றி பகுதிக்கு நான்கு பேர் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது திடீரென ஒற்றை யானை வனப்பகுதியிலிருந்து சாலைக்கு வந்தது. ஓட்டுநர் சத்தம் ஏதும் எழுப்பாமல் ஜீப்பை ஓரமாக நிறுத்தினார். இவர்கள் இருந்த ஜீப்பை நோக்கி யானை நடந்து வந்தது. இதனால் ஜீப்பிலிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
ஜீப்பில் இருந்தவர்கள் 'ஓரம்போ விநாயகா' எனக் கன்னட மொழியில் கூறுகின்றனர். யானை அவர்கள் சொல்பேச்சு கேட்பது போல் ஓரமாக சென்று வனப்பகுதிக்குள் சென்றது. இதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதை ஜீப்பிலிருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: யானைகள் கண்காணிப்பு பணி: வேட்டை தடுப்பு காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?