சீனாவில் முதலில் மக்களை தாக்கிய கரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கரோனா தாக்கம் வந்ததையடுத்து, தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கரோனோ தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு காணொலியை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.
இதில் கரோனா வைரஸ் அறிகுறி, தடுப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு நாடகம் நடித்து காட்டியுள்ளனர். இந்த காணொலி சமூகவலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சிறுமிகளின் விழிப்புணர்வு காணொலி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தொற்று அறிகுறியுடன் 22 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பு!