சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 116ஆவது பிறந்தநாள் இன்று, ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள அவரது பிறந்த வீட்டில் கொண்டாடப்பட்டது. இதில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று திருப்பூர் குமரனின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது, ’தேசத்திற்காக பாடுபட்டவர் திருப்பூர் குமரன். அவரது பிறந்தநாள் விழா 2015ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேலும் கால்நடை பூங்கா சங்ககிரி அருகே விரைவில் தொடங்கப்படும் என்றும், பல்வேறு வெளிநாட்டினர் இந்தப் பூங்காவில் பங்கேற்க உள்ளனர் என்றும்; முதலாவதாக சிட்னி பல்கலைக்கழகம் பங்கேற்கிறது என்றும் தெரிவித்தார்.
அதேபோல், நாட்டின கோழிப் பாதுகாப்பு மையம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்படும் என்றவர், அரசு கேபிளைப் பொறுத்தவரை மறைமுக உத்தரவு இல்லை. 26 லட்சம் செட்டாப் பாக்ஸ் இதுவரை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: அரசு கேபிள் இணைப்பு எண்ணிக்கையை ஒரு கோடியாக உயர்த்த இலக்கு - அமைச்சர்