உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரசுக்கு இதுவரை சுமார் 7500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்ந கரோனா வைரசைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு வரும் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கபட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது.
இந்த சரணாலயத்தில் உள்ள வெளிநாட்டுப் பறவைகளைக் காண்பதற்கு உள்ளூர் மட்டுமன்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால், மாவட்ட வன அலுவலர் விஸ்வநாதன் உத்திரவின் பேரில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் வரும் 31ஆம் தேதி வரை மூடப்படுவாதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: சென்னையில் மூடப்பட்ட பூங்காக்கள்