ஈரோடு: ஆர்கேவி சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை, கரோனா தொற்று காரணமாக வ.உ.சி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
இங்கு அண்டை மாநிலங்களிலிருந்து காய்கறிகள் விற்பனைக்குக் கொண்டு வரும் நிலையில், மாவட்டத்திலிருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடைகளுக்கு மூன்று மடங்கு அதிக கட்டணம் வசூல்
இதில் இடம்பெற்றிருக்கும் கடைகளுக்கு மாநகராட்சி ரூ.16 என வரி நிர்ணயித்துள்ளது. ஆனால் குத்தகைதாரர்களோ ரூ.50 வசூலித்து வருவதாக காய்கறி வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கடந்த இருதினங்களாகப் பல்வேறு கட்டப்போராட்டங்கள் நடந்தன. இதனையடுத்து நேற்று (ஜூலை 8) இப்பிரச்னையைத் தீர்க்க முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்க ஒருநாள் கடையடைப்புப் போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டனர்.
இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 15 அடி ஆழத்துக்கு மண் எடுத்ததால் உடைந்த பாலம்: போக்குவரத்து துண்டிப்பு