நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. கரோனா பாதிப்பிற்கு இடையிலும் நீட் தேர்வு நடைபெற்றதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனிடையே, தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களுக்கு மெழுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன.
இதையும் படிங்க:'நீட் தேர்வை கைவிடுங்கள்' - நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் பேச்சு