ETV Bharat / state

சூறாவளிக்காற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான வாழைமரங்கள் சேதம்! - Erode

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரூ.1 கோடி மதிப்பிலான 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன. இதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banana damage
author img

By

Published : May 8, 2019, 2:53 PM IST

நேற்று பெய்த கனமழை மற்றும் சூறாவளிக்காற்றினால் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை, கதளி, ரோப்பஸ்டோ, தேன்கதிர், பூப்பழம் உள்ளிட்ட இரக வாழைகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்ததாகவும், இவை அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

சூறாவளிக்காற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான வாழைமரங்கள் சேதம்

இப்பகுதியில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு முதலீடு செலவு மட்டும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆகும் எனவும் தற்போது செய்துள்ள முதலீடுகள் முற்றிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆனால், தமிழக அரசு சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் காப்பீட்டுத்திட்டமும் நடைமுறையில் இல்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர்.

சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைகளை அரசு சார்பில் இதுவரை அலுவலர்கள் யாரும் வந்து பார்வையிடவில்லை எனவும் வருவாய்துறையினர் சாய்ந்துள்ள வாழைகளை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்று அலட்சியமாக பதிலளிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

தற்போது சாய்ந்துள்ள வாழைகளுக்கு தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தனிநபர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தை அரசு அமல்படுத்தவேண்டும் என்றும் வாழை சாகுபடி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே  சூறாவளிக்காற்றில் ரூ.1 கோடி மதிப்பிலான  25 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் 
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216

TN_ERD_SATHY_04_08_VALAI__DAMAGES_VIS_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகதேவன்பாளையம் அய்யம்புதூர் சின்னகொரவம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்  பெய்த கன மழை மற்றும் சூறாவளிக்காற்றினால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தனி நபர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தை அமுல் படுத்தவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நாகவேதன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சின்னகொவம்பாளையம் பெரியகொரவம்பாளையம் அய்யம்புதூர் பழையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று இரவு பெய்த கன மழை மற்றும் சூறாவளிக்காற்றினால் பத்து மற்றும் பதினைந்து தினங்களுக்குள் அறுடைக்கு தயார் நிலையில் இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் இப்பகுதியில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வாழை சாகுபடியை பொறுத்தவரை ஓர் ஆண்டு சாகுபடியாக உள்ளதாகவும் கடந்த ஓர் ஆண்டுகளாக பாடுபட்டு முதலீடு செய்து காப்பாற்றியுள்ள நிலையில் ஒரே காற்றில் அனைத்தையும் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு ஏக்கருக்கு முதலீடு செலவு மட்டும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ஆகும் எனவும் தற்போது செய்துள்ள முதலீடுகள் முற்றிலும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில் சூறாவளிக்காற்றினால் வாழைகள் சேதமடைந்து வருவதாகவும் இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு சேதமடைந்த வாழைக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் காப்பீட்டுத்திட்டமும் நடைமுறையில் இல்லை என்றும் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது நேற்று பெய்த கன மழை மற்றும் சூறாவளிக்காற்றினால் இப்பகுதியில் பயிடப்பட்டிருந்த செவ்வாழை கதளி ரோப்பஸ்டோ தேன்கதிர் பூப்பழம் உள்ளிட்ட இரக வாழைகள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தாகவும் இவை அனைத்து சேதமடைந்துள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். வாழை மரங்கள் காற்றில் சாய்து போகாதவாறு கயிறு கட்டியும் கம்புகள் முட்டுக்கொடுத்தும் பாதுகாத்து வந்ததாகவும் ஆனால் அவைகளை எல்லாம் முறியடித்து சூறாவளிக்காற்று வாழை மரங்களை சாய்த்து சென்றுள்ளதாகவும் தெரிவித்தனர். சூறாவளிக்காற்றினால் சேதமடைந்த வாழைகளை அரசு சார்பில் இது வரை யாரும் வந்து பார்வையிடவில்லை எனவும் வருவாய்துறையினர் சாய்ந்துள்ள வாழைகளை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என்று அலட்சியமாக பதிலளிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். தற்போது சாய்ந்துள்ள வாழைகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் தனிசபர் பயிர் காப்பீட்டுத்திட்டத்தை அரசு அமுல்படுத்தவேண்டும் என்றும் வாழை சாகுபடி விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.