ETV Bharat / state

முட்புதரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுப்பு - காவல்துறை விசாரணை!

ஈரோடு: பெருந்துறை அருகே முட்புதரில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

unidentified-male-body-recovered-in-bush-police-investigation

author img

By

Published : Sep 2, 2020, 3:31 PM IST

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள புங்கம்பாடி பகுதியிலுள்ள, முட்புதரில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர், அங்கு ரத்த காயங்களுடன் அழுகிய நிலையிலிருந்த 45 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மதுபோதையில் முட்புதருக்குள் தவறி விழுந்து இறந்து போனாரா?, முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் யாரேனும் அவரை கொலை செய்து விட்டு ரத்தக் காயங்களுடன் முட்புதருக்குள் வீசிச் சென்றனரா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சடலத்தில் ஏற்பட்டுள்ள ரத்தக் காயங்கள் அவரது மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், உடற்கூறாய்வு பரிசோதனைக்கு பின்னரே அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:‘அரியரை வென்ற அரசனே, மாணவர்களின் பாகுபலியே’ - முதலமைச்சரை புகழ்பாடும் மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.