திருப்பத்தூர்: மாதனூர் அடுத்த பட்டுவாம்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர் மதன். இவர் மாதனூர் பகுதியில் உள்ள தாகூர் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
மதன் இன்று காலை பள்ளிக்கு சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மாதவன் மற்றும் அருண் என்ற இரு இளைஞர் மதனை வழிமறித்து அவரின் கையில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மதனை இரு இளைஞர்கள் சவுக்கு கம்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் முதுகு, மற்றும் கை பகுதிகளில் பலத்த காயமடைந்த மாணவரை மீட்ட அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவரை தாக்கிய இரு இளைஞர்களை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் 1,500 ரூபாயாக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு