புஞ்சைபுளியம்பட்டி அருகே மாதம்பாளையம் பழத்தோட்டம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் சுகுமாரன் தலைமையில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, பவானிசாகரிலிருந்து வந்த டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனையிட்டதில் இரு லாரிகளில் உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவது தெரியவந்தது.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர்கள் சிவபாலன், விஜய் ஆகியோரிடம் வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், இரண்டு லாரிகளையும் வருவாய்த் துறையினர் பறிமுதல்செய்து சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுசென்றனர்.
மேலும், உரிய அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.