ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை பகுதியில் வடமாநில இளைஞர்கள் நடத்திவரும் கடைகளில் குட்கா உள்ளிட்ட போதை பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அங்குள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆசாராம் (35) என்பவரது கடையில் விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த 27 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா, போதைப் பாக்குகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து சோனாராம் (29) என்பவரது கடையில் பதுக்கிவைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 மூட்டை குட்கா பொருள்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல் துறையினர், கோபிசெட்டிபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குடோனில் பதுக்கிவைக்கப்பட்ட குட்கா பறிமுதல்: மூவர் கைது