ஈரோடு : நிசார் அலி என்பவர் அவரது நண்பர் ராமச்சந்திரன் ஆகியோர் குடும்பத்துடன் கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியிலுள்ள தர்காவிற்குச் சென்றுள்ளனர். அதைத்தொடர்ந்து அங்கிருந்து வடகரைப் பகுதியில் உள்ள நரசிம்மர் கோயிலுக்குச் சென்றுவிட்டு கோவை வழியாக ஈரோட்டிற்கு கிளம்பியுள்ளனர்.
அப்போது ஆம்னி வேன் வாளையாறு அடுத்த கே.ஜி. சாவடி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த சிறுவன் மித்ரன்(3), சிறுமி அஞ்சுதா ஸ்ரீ(5), ஆகிய இரு குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காரை ஓட்டி வந்த மோனிஷ், ராமச்சந்திரன், சரிதா, நந்திதா, அக்ஷயா, காஞ்சனா குமாரி, இந்துமதி ஆகியோர் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் காரில் வந்த நிசார் அலி லேசான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதையும் படிங்க : வங்கியில் போலி நகைகளை அடகுவைத்து ரூ.71 லட்சம் மோசடி: நகை மதிப்பீட்டாளர் கைது