ETV Bharat / state

ஆன்லைன் சூதாட்டத்தால் வெறிச்செயல்:சொந்த சித்தியை உடற்பயிற்சி செய்யும் இரும்பு ராடால் தாக்கி 21 சவரன் நகைபறிப்பு

ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட 60 லட்சம் கடனை அடைக்க சொந்த சித்தியை உடற்பயிற்சி செய்யும் இரும்பு ராடால் தாக்கி 21 சவரன் தங்க நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞரை சித்தோடு காவல் துறையினர் கைது செய்தனர்

சொந்த சித்தியை உடற்பயிற்சி செய்யும் இரும்பு ராடால் தாக்கி 21 பவுன் தங்க நகை பறிப்பு

author img

By

Published : Sep 13, 2022, 2:55 PM IST

ஈரோடு: சித்தோடு அருகே உள்ள மாமரத்துபாளையம் சக்தி தேவி நகரைச்சேர்ந்தவர் வெங்கடேஷ். கட்டுமானத்தொழில் செய்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவியும், நந்தினி என்ற மகளும், தமிழ்ச்செல்வன் என்ற மகனும் உள்ளனர். நந்தினி அவரது கணவருடன் சேலத்தில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி அன்று கட்டுமானப்பணிகளுக்காக வெங்கடேஷ் வெளியூர் சென்ற நிலையில் தனது மனைவி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து வெங்கடேஷ் மருத்துவமனைக்குச்சென்று மனைவி வசந்தியை பார்த்துள்ளார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்தபோது வசந்தியின் அக்கா மகனான மது என்பவரின் மகன் பிரகாஷ் வீட்டிற்கு வந்துள்ளார். (வெங்கடேஷ் கட்டுமானத்தொழில் செய்து வரும் கட்டடங்களுக்கு எலக்ட்ரிக்கல் வேலையை பிரகாஷ் செய்து வருகிறார்). வெங்கடேஷ் வீட்டிற்குச்சென்ற பிரகாஷ் எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் பொருட்கள் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள எலக்ட்ரிக்கல் பொருட்களை எடுப்பதற்காக வசந்தி சென்றுள்ளார். பொருட்களை எடுக்க கீழே குனிந்தபோது உடற்பயிற்சி செய்ய பயன்படுத்தும் இரும்புராடால் வசந்தியை பிரகாஷ் கடுமையாகத்தாக்கி விட்டு கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தாலிக்கொடி, மூன்று சவரன் தோடு, ஆறரை சவரன் ஆரம், மூன்றரை சவரன் நெக்லஸ் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளார்.

இரும்புராடால் பிரகாஷ் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய வசந்தி, சற்று நேரத்தில் எழுந்து பார்க்கும் போது பிரகாஷ் தன்னை தாக்கி விட்டு கழுத்தில் அணிந்திருந்த நகைகள் மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை திருடிக் கொண்டு தப்பிச்சென்றதாக கூறினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச்சம்பவம் தொடர்பாக வெங்கடேஷிடம், சித்தோடு காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய பின்பு, நகைகளுடன் தலைமறைவான வசந்தியின் அக்கா மகனான பிரகாஷை கைது செய்தனர். காவல் துறை நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பிரகாஷ் தீவிரமாக விளையாடி வருவதும், அதில் 60 லட்ச ரூபாய் பணத்தைப் பறிகொடுத்தும் உள்ளார். மேலும் பலரிடம் பணம் கடனாக பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கடனாளியாக இருந்துள்ளார்.

அந்த கடனை அடைப்பதற்காக வசந்தியிடம் பிரகாஷ் பணம் கேட்டுள்ளார். வசந்தி பணம் தர மறுக்கவே எலக்ட்ரிக்கல் வேலை செய்யும் பொருட்கள் வேண்டும் எனக்கூறி வீட்டின் இரண்டாவது மாடிக்குச்சென்ற போது உடற்பயிற்சி செய்யும் இரும்பு ராடால் தாக்கி, நகைகளைப்பறித்துச்சென்றது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பிரகாசிடம் இருந்து நகைகளைப் பறிமுதல் செய்த சித்தோடு காவல்துறையினர் பிரகாஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனை அடைக்க சொந்த சித்தியை இரும்பு ராடால் தாக்கி, நகைகளைப் பறித்துச்சென்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: அனுமதியின்றி கிராவல் மண் கடத்த முயன்ற 4 வாகனங்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.