ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சத்தியமங்கலம் - கோபிசெட்டிப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன விபத்து ஏற்படுகிறது. தேனியில் இருந்து காய்கறி பாரம் ஏற்றுவதற்கு தாளவாடி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அரியப்பம்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது, முன்னால் சென்ற கார் மீது மோதி லாரி சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் காயமின்றி உயிர் தப்பினர். இவர்கள், திருப்பூரில் இருந்து பண்ணாரியம்மன் கோயிலுக்குச் சென்ற போது, விபத்து நிகழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், மீட்பு வாகனம் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். தற்போது சாரல் மழை பெய்து வருவதால், வானங்களை மெதுவாக இயக்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தினர்.