சத்தியமங்கலம் அடுத்த ஆசனூர் மலைப்பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் குறுகிய செங்குத்தான வளைவுகளைக் கொண்ட பாதையில் பயணிக்கின்றன. குறிப்பாக கர்நாடக மாநில வாகனங்கள் அதிகளவில் பயணிக்கின்றன. இந்நிலையில் நேற்று (மார்ச்.1) தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக் கொண்டு கர்நாடக மாநிலம் ஹாசனுக்கு சென்ற சரக்கு லாரி அரேப்பாளையம் எனும் பிரிவு பாதையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே வழியாக கர்நாடகத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீது, அந்த லாரி மோதியது. இதில் கார் பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. விபத்தில் காரில் பயணித்த ராதாமணி, மோனிகா, ஓட்டுநர் தனபால் ஆகிய மூவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் மீட்பு வாகனம் கொண்டு வரப்பட்டு கார் மேலே எடுக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து ஆசனூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தவுள்ள சீமான்!