ETV Bharat / state

காதலர் தினத்தன்று திருநம்பிக்கும் இளம்பெண்ணுக்கும் சுயமரியாதை திருமணம்! - கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிப்பாளையத்தில் திருநம்பியும் இளம்பெண்ணும் காதலர் தினத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

Trans man and the young woman got married in front of Periyar photo
காதலர் தினத்தன்று திருநம்பிக்கும் பெண்ணுக்கும் சுயமரியாதை திருமணம்
author img

By

Published : Feb 14, 2023, 7:47 PM IST

காதலர் தினத்தன்று திருநம்பிக்கும் இளம்பெண்ணுக்கும் சுயமரியாதை திருமணம்!

ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவலிங்கம், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சென்னியப்பன் முன்னிலையில் திருநம்பிக்கும் பட்டதாரி பெண்ணிற்கும் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுக்கூடல் பிள்ளையார் கோயில் வீதியைச் சேர்ந்த காளியப்பன் மகள் பி.காம் பட்டதாரியான அருணாதேவி என்பவருக்கும், விருதுநகர் மாவட்டம் அழகாபுரி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அருண்பாஷ் என்ற திருநம்பிக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக பழக்கம் இருந்துள்ளது.

அருணாதேவி காஞ்சிபுரத்தில் இருந்து விருதுநகர் அழகாபுரி சென்றபோது, அருண்பாஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து இருவரும் காதலித்த நிலையில், இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், அதை ஏற்க மறுத்ததால் இருவரும் கடந்த இரு மாதங்களாக வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தனர்.

அதைத்தொடர்ந்து இருவரும், குமாரபாளையத்தில உள்ள நண்பர் மூலமாக இன்று கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மனிதம் சட்ட உதவி மையத்தில் தஞ்சமடைந்தனர். அதைத்தொடர்ந்து இருவரும் காதலர் தினத்தன்று தந்தை பெரியார் உருவப்படத்திற்கு முன்னிலையில் மாலை மாற்றி சீர்திருத்த திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெற்றோர் எதிர்ப்பை மீறி பெரியார் சிலை முன் காதல் ஜோடி சுயமரியாதை திருமணம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.