ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மனித விலங்கு மோதல் அதிகரித்து வருகிறது. அண்மையில் வனவிலங்கு கணக்கெடுப்பின்போது வன ஊழியர் மற்றும் சமூக ஆர்வலர் யானை தாக்கி உயிரிழந்தனர்.
கடம்பூரில் நேற்று ஒரு பெண் யானை தூக்கி எறிந்து உயிரிழந்தார். இந்நிலையில், யானை- மனிதன் மோதலை தவிர்க்கவும் யானைகள் குணாதிசயங்கள், அதன் வாழ்க்கை முறை வனத்துறை குறித்து தெரிந்து கொள்ளவும் வனத்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனச்சரகங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில், யானைகளை கட்டுப்படுத்துவதும் குறித்து வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதன் மூலம் யானையின் பழக்க வழக்கங்கள் அறிய முடிவதால் அதன் தாக்குதலை எதிர்கொள்ள முடியும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். யானைகள் ஆராய்ச்சியாளர் ராம்குமார் வனத்துறையினருக்கு பயிற்சியளித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் இன்று 16 விமானங்கள் ரத்து