தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசானது பல வழிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மாநில எல்லையில் உள்ள தாளவாடிக்கு, கர்நாடகத்தில் இருந்து தினந்தோறும் பயணிகள் வருவதினால், அவர்களால் ஏற்படும் தொற்றை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவலர்கள் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி குழியை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும் அருள்வாடி, மெட்டல்வாடி, பாரதிபுரம், எல்லைக்கட்டை ஆகிய இடங்களில் இது போன்று பள்ளங்கள் தோண்டியதால் வாகனங்களில் வருவோர் வேறு வழியின்றி திரும்பி செல்கின்றனர்.
முக்கிய சாலைகளில் மட்டும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். கர்நாடகாவிலிருந்து வருவோர் கிராமப்புறங்கள் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுக்கவே இந்த வழியை தமிழ்நாடு காவல்துறை கையாண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா பாதித்த இடங்களை தனிமைப்படுத்த எதிர்ப்பு: வியாபாரிகள் சாலை மறியல்