ஈரோடு: அந்தியூர் வழியாக பர்கூர் மலைப்பாதையில் கர்நாடக மாநிலம் கொள்ளேகால், மைசூர் செல்லும் பாதையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த இரு வாரங்களாக பர்கூர் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு இப்பாதையில் பாறைகள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாறைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
இந்நிலையில் பர்கூர் மலைப்பாதையில் தாமரைக்கரை அருகே செட்டிநொடி, நெய்கரை பகுதிகளில் ராட்சத பாறைகள் மீண்டும் விழுந்துள்ளன.
இதனால் தமிழ்நாடு, கர்நாடக மாநிலத்துக்கு இடையிலான வாகனப் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையின் நடுவே கிடக்கும் மிகப்பெரிய பாறைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'மத சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்' - மனித உரிமை ஆணையம்