ஈரோடு மாவட்டத்தில் விளையும் மஞ்சள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஞ்சள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 15 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் வெளிமாநில வியாபாரிகள் ஈரோடு வந்து விதை மஞ்சளை வாங்கி சாகுபடி செய்ததன் காரணமாக அவர்களின் வரத்து வெகுவாக குறைந்து போனது. மேலும் வெளிமாநிலங்களில் விளையும் மஞ்சளைக் குறைவான விலைக்கு அவர்கள் விற்பனை செய்வதால் ஈரோடு மஞ்சள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
மருத்துவ குணங்கள் கூடிய தரமான மஞ்சள் ஈரோடு மாவட்ட மண்ணுக்கு மட்டுமே உரித்தானது. இதனால் இங்கு சாகுபடி செய்யப்படும் மஞ்சள் தேவை எப்போதும் இருந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மஞ்சளை பூச்சிப் பிடிக்காமலும் நல்ல முறையில் பாதுகாத்திட குளிர்பதனக் கிடங்கு அமைத்து தர வேண்டும், மஞ்சள் விவசாயிகளையும் வியாபாரிகளையும் காப்பாற்றிட அரசு மஞ்சளுக்குரிய விலையை குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரம் என நிர்ணயம் செய்ய வேண்டும் என அதன் வியாபாரிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மஞ்சள் சந்தையில் இன்று (அக்.12) ஒரு குவிண்டாலுக்கு 3 ஆயிரத்து 899 ரூபாய் முதல் 4 ஆயிரத்து 599 ரூபாய் வரையிலும், விரலி மஞ்சள் 4 ஆயிரத்து 899 ரூபாய் முதல் 5 ஆயிரத்து 699 வரையிலும் விற்பனையானது.
இதையும் படிங்க: மஞ்சள் விலை சரிவு - விவசாயிகள் வேதனை!