ETV Bharat / state

பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டதால் மீன் கடையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஈரோடு: பவானிசாகர் அணை பூங்கா மூடப்பட்டதால் அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மீன் கடையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
மீன் கடையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
author img

By

Published : Apr 14, 2021, 10:51 PM IST

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் முன்புறம் 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணை பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் பல்வேறு விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

கரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 10ஆம் தேதி பூங்கா முதல் மூடப்பட்டது. ஆனால் இதனை அறியாமல், இன்று (ஏப்ரல்.14) தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பவானிசாகர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து ஏமாற்றம் அடைந்தனர்.

மீன் கடையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இருப்பினும் பூங்காவிற்கு எதிரே உள்ள மீன் கடைகளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் மீன் வருவல் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர். மேலும் அணையின் முன்பு அவர்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: பவானிசாகர் அணை பூங்கா தற்காலிகமாக மூடல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.