ETV Bharat / state

கொடிவேரி அணை மூடல்: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - gopi

பாலத்தின் மீது சுடச்சுட வறுத்த மீன் வகைகளை உண்டு மகிழ்ந்தனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றின் கரைகளில் சமைத்து ஒன்றாக உணவருந்திச் சென்றனர். ஆனால், அருவிபோல் கொட்டும் தண்ணீரில் குளித்து கும்மாளமிட முடியவில்லையே என பலர் வேதனை அடைந்தனர்.

kodiveri dam
kodiveri dam
author img

By

Published : Jan 15, 2021, 7:42 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை அருவிக்கு மாட்டுப் பொங்கலையொட்டி குவிந்த சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணை 600 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கல்லால் அருவிபோல் தண்ணீர் கொட்டும் நிலையில் கட்டப்பட்ட தடுப்பணை அருவியாகும். பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் கொடிவேரி தடுப்பணைக்கு வந்து அருவியாக விழுந்து கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

இந்த தடுப்பணை அருவிக்கு விடுமுறை நாட்களிலும், பண்டிகை தினங்களிலும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழர்களின் முக்கிய பண்டிகையாக அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அடுத்து வரும் மாட்டுப்பொங்கல் தினமான இன்று, கொடிவேரி தடுப்பணை அருவிக்கு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கொடிவேரி அணைப்பகுதியில் குவியத்தொடங்கினர்.

கரோனா தொற்று நடவடிக்கையாக கொடிவேரி தடுப்பணை அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும், பூங்காங்களில் விளையாடவும் மாவட்ட நிர்வாகம் 15, 16,17 ஆகிய தேதிகளில் தடைவிதித்துள்ளது. அதனால் கொடிவேரி முகப்பில் தடுப்புகள் வைத்து கடத்தூர் காவல்துறையினர் கொடிவேரி அணைப் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு தடுத்துவருகின்றனர். இதனால் கொடிவேரி அணைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தின் மீது நின்று கொடிவேரி அணையின் அருவியை பார்த்தும், செல்பி எடுத்தும் ரசித்தனர்.

பாலத்தின் மீது சுடச்சுட வறுத்த மீன் வகைகளை உண்டு மகிழ்ந்தனர். ஒரு சில சுற்றுலா பயணிகள் பவானி ஆற்றின் கரைகளில் சமைத்து ஒன்றாக உணவருந்திச் சென்றனர். ஆனால், அருவிபோல் கொட்டும் தண்ணீரில் குளித்து கும்மாளமிட முடியவில்லையே என பலர் வேதனை அடைந்தனர். இதனால் தொலை தூரத்திலிருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.