ETV Bharat / state

ஈரோட்டில் மாசு கட்டுப்பாட்டு துறையை தவிர வேறு எதிலும் குறைகள் இல்லை - உறுதிமொழிக் குழு தகவல்! - நொய்யலாறு

TN Assurance Committee: தொழிற்சாலைகளால் மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வகமும் இணைந்து ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழி குழு பரிந்துரைத்துள்ளது.

ஈரோட்டில் தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு ஆய்வு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 10:36 AM IST

ஈரோட்டில் தமிழக சட்டப்பேரவை அரசு உறுதிமொழிக்குழு ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை, தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், சட்டமன்றப்பேரவை அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தீயணைப்பு நிலையம், புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள், கால்நடை தீவன தொழிற்சாலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மஞ்சள் வணிக வளாகம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட பின், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடனான உறுதிமொழிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அரசு உறுதிமொழி குழுத் தலைவர் வேல்முருகன், “பெருந்துறை சிப்காட் வளாகத்தில் முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவுநீரை வெளியேற்றி நீர் நிலைகளில் கலக்கச் செய்யும் ஆலையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மூலம் குழு அமைக்க உறுதிமொழி குழு பரிந்துரை செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யலாறு மற்ற நீர்நிலையை அதிக அளவிலான டிடிஎஸ் சுமார் 7 ஆயிரம் வரை இருப்பதாக துறை அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

இனி வரும் காலங்களில் கேன்சர், மலட்டுத்தன்மை போன்ற கொடிய நோய்கள் மக்களுக்கு இல்லாத வகையில் செயல்படுத்த வேண்டுமென துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மாசு இல்லாத ஈரோடாக பாதுகாக்க வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது. அதற்காக ஆலைகளில் உள்ள மாசு கலந்த நீரை லாரி மூலம் எடுத்துச் சென்று சுத்திகரிக்க வேண்டும் எனவும், இதனை புகைப்படம் எடுத்து ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என குழு உத்தரவிட்டு உள்ளது.

இந்த மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு துறையை தவிர வேறு எதிலும் குறைகள் இல்லை. சிப்காட் ஆலை, தோல் தொழிற்சாலைகள், சாயத் தொழிற்சாலைகளால் மக்களுக்கு பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மற்றும் சென்னையில் உள்ள பரிசோதனை ஆய்வகமும் இணைந்து ஆய்வு செய்து விரிவான ஒரு அறிக்கை தயார் செய்து குழுவுக்கு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது" - அமைச்சர் முத்துசாமி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.