ETV Bharat / state

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது புகார்

author img

By

Published : Apr 24, 2021, 11:09 AM IST

ஈரோடு: டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரவுடி பேபி சூர்யா
ரவுடி பேபி சூர்யா

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தனக்கோடி. இவர் திருக்குறிப்புத் தொண்டர் சமூகநலப் பேரவையின் மாநில தலைவராக உள்ளார். இவர் நேற்று (ஏப்ரல்.23) ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது, ”திருப்பூரைச் சேர்ந்த டிக்டாக் புகழ் ரவுடி பேபி சூர்யா என்ற பெண் சமூக வலைத்தளங்களில் அருவருக்கத்தக்க வீடியோ எடுத்து வண்ணார் சமுதாயத்தினரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதத்தில் பதிவேற்றி வருகிறார்.

டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது புகார்

வண்ணார் சமூகத்தினருக்கு கோபமூட்டும் வகையிலும், சமுதாயத்தினரின் பொது அமைதியைக் குலைக்கும் வண்ணத்திலும், எங்கள் சமூகத்தினரை இழிவுபடுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். முகநூலில் வெளியிட்ட பதிவினை நீக்குமாறு எச்சரித்தும், தொடர்ந்து அப்பெண் நீக்காமல் இருப்பது எரிச்சலடைய செய்கிறது. அவரது ஆண் நண்பர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.