நாடு முழுவதும் கரோனா தொற்று நோய் பிறருக்கு பரவாமல் தடுப்பதற்கு முகக்கவசம் அணிவது, 1 மீட்டர் தூரத்தில் இடைவெளி விட்டு நிற்பது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதை அறிவுரையை மொடக்குறிச்சியில் உள்ள மதுபானக்கடையில் சரியாக பின்பற்றினர். மதுபான கடை முன் 1 மீட்டர் தூர இடைவெளியில் கோடுகள் வரைந்து ஒருவருக்கு பின் ஒருவராக நின்று வாங்கினர்.
கோட்டில் இருந்து முன்னால் நிற்பவர் வெளியேறியவுடன் அதனைத் தொடர்ந்து நிற்பவர் செல்ல வேண்டும். இதனை ஒழுங்குபடுத்துவதற்கு டாஸ்மாக் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.